விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தமிழ் சினிமா உலகில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் த்ரிஷா. இதற்கு முன்பு வேறு எந்த ஒரு நடிகையும் இவ்வளவு நீண்ட காலம் முன்னணி நடியாக இருந்ததில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
2002ம் ஆண்டு வெளிவந்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழிலும், தெலுங்கிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் த்ரிஷா. பல வெற்றிகளைக் குவித்த போது கிடைத்த வரவேற்பு, புகழை விட 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அவருக்கான வரவேற்பு வேறொரு தளத்தில் உச்சத்தைத் தொட்டுவிட்டது.
படம் வெளியாவதற்கு முன்பிருந்த விமர்சனங்களை தனது தோற்றத்தாலும், நடிப்பாலும் தவிடுபொடியாக்கியவர். இன்றுடன் 40 வயதை நிறைவு செய்யும் த்ரிஷாவுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். த்ரிஷாவைப் பார்த்தால் 40 வயதை நிறைவு செய்தவர் போலவா இருக்கிறது என நமது தலைப்பிற்கும் ரசிகர்கள் 'கமெண்ட்' செய்ய வாய்ப்புள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்காக 'சோழர்களின் பயணம்' புரமோஷனில் அவர் கலந்து கொண்ட போது விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். அதற்கே ரசிகர்கள் அமோகமாகப் பாராட்டினார்கள். இன்று அந்தப் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களின் டைம்லைனில் த்ரிஷா நிறைந்திருக்கிறார்.