‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

இந்தியத் திரையுலகத்தில் பிலிம்பேர் விருதுகள் மிக நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் விருதுகளாக உள்ளன. தென்னிந்தியத் திரையுலகத்திற்கான 69வது பிலிம்பேர் விருதுகள் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றன. அதில் தமிழ் சினிமாவிற்கான விருதுகளை வென்ற வெற்றியாளர்கள்.
சிறந்த திரைப்படம் : சித்தா
சிறந்த இயக்குனர் : எஸ்யு அருண்குமார் - சித்தா
சிறந்த படம் (விமர்சகர்கள் விருது) : விடுதலை - பார்ட்1
சிறந்த நடிகர் : விக்ரம் - பொன்னியின் செல்வன் 2
சிறந்த நடிகர் (விமர்சகர்கள் விருது) : சித்தார்த் - சித்தா
சிறந்த நடிகை : நிமிஷா சஜயன் - சித்தா
சிறந்த நடிகையர் (விமர்சகர்கள் விருது) : ஐஸ்வர்யா ராஜேஷ் (பர்ஹானா), அபர்ணா தாஸ் (டாடா)
சிறந்த துணை நடிகர் : பஹத் பாசில் - மாமன்னன்
சிறந்த துணை நடிகை : அஞ்சலி நாயர் - சித்தா
சிறந்த இசை ஆல்பம் : திபு நினன் தாமஸ், சந்தோஷ் நாராயணன் - சித்தா
சிறந்த பாடலாசிரியர் : இளங்கோ கிருஷ்ணன் - அக நக… - பொன்னியின் செல்வன் 2
சிறந்த பின்னணிப் பாடகர் : ஹரிச்சரண் - சின்னஞ்சிறு நிலவே… - பொன்னியின் செல்வன் 2
சிறந்த பின்னணிப் பாடகி : கார்த்திகா வைத்யநாதன் - கண்கள் ஏதோ… - சித்தா
சிறந்த ஒளிப்பதிவாளர் : ரவி வர்மன் - பொன்னியின் செல்வன் 2
சிறந்த கலை வடிவமைப்பாளர் : தோட்டா தரணி - பொன்னியின் செல்வன் 2
வழங்கப்பட்ட விருதுகளில் சித்தா, பொன்னியின் செல்வன் 2 படங்களைக் சார்ந்த கலைஞர்களுக்குத்தான் அதிக விருதுகள் கிடைத்துள்ளன.