அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்கும் மகேஷ் பாபு | நான் இப்போது சிங்கிள்: ஸ்ருதிஹாசன் | கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ? | படம் வெளியாகும் முன்பே பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி' | ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்' | 'ஜெயிலர்' வசூலை தாண்டுமா 'குட் பேட் அக்லி' | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! |
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக எடுத்து சாதித்துவிட்டார் மணிரத்னம். முதல்பாகம் கடந்தாண்டு வெளியாகி ரூ.500 கோடி வசூல் சாதனை புரிந்தது. இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சனமும் பெரும்பாலும் பாராட்டியே வருகின்றன. அதேசமயம் கல்கி நாவலில் சொன்னது போன்று படத்தின் கிளைமாக்ஸ் இல்லை, மணிரத்னம் அதை மாற்றியது ஏன் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
இந்த படத்திற்காக கடந்த 20 நாட்களாக படத்தில் நடித்த கலைஞர்கள் சோழர்கள் பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தை புரொமோஷன் செய்தனர். சென்னையில் துவங்கிய இந்த பயணம் ஐதராபாத், கொச்சி, பெங்களூரு, மும்பை, டில்லி உள்ளிட்ட பல ஊர்களை சென்றடைந்து இறுதியாக சென்னையில் நிறைவடைந்தது. விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா, ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேற்று படம் வெளியான போதும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், சோபிதா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர். தொடர்ந்து இன்று(ஏப்., 29) சென்னையில் உள்ள தியேட்டரில் நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோருடன் படம் பார்த்தார். இவர்களுடன் விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு ஆகியோரும் படம் பார்த்தனர். இந்த போட்டோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின.