‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
கிரிக்கெட்டில் ஜ.பி.எல் போல கபடி விளையாட்டில், புரோ கபடி லீக் நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் என்ற அணியின் போட்டி நடைபெற்றது. இந்த அணியை நடிகர் அபிஷேக் பச்சன் தான் நிர்வகித்து வருகிறார். அதனால் ஜெய்பூர் அணியின் விளையாட்டை காண்பதற்காக, அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யாவும் மற்றும் அபிஷேக் பச்சனின் சகோதரி மகள் நவ்யாவும் வந்திருந்தனர்.
இந்த நிலையில் அனைவரும் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்போது ஐஸ்வர்யா ராயின் காதுகளில் அபிஷேக் பச்சன் ஏதோ கூறியுள்ளார். அதன் பிறகு ஐஸ்வர்யா ராய் தனது கண்களை உருட்டி மிகுந்த கோபத்துடன் அபிஷேக் பச்சனை பார்க்கிறார். மேலும் உடன் வந்திருந்த உறவினர் மீதும் கோபப்பட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.