கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது | கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி | காதலருடன் கட்டியணைத்து போஸ் கொடுத்த சமந்தா | 50 கோடி கிளப்பில் இணைந்த ‛டயஸ் இரே' : ஹாட்ரிக் அடித்த பிரணவ் மோகன்லால் |

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'துணிவு'. உண்மையை சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்க, வரும் பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் நடிகர் அஜித் தனது டப்பிங் வேலைகளை முடித்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் ஒன்றை அனிரூத் பாடியுள்ளார். விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.