ராகவா லாரன்ஸின் 25வது படத்தை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்! | அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் முடித்த சிவகார்த்திகேயன்! | பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் வரிசைக்கட்டும் படங்கள்! | சிம்புவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் தி கோட் படத்தில் நடந்த மாற்றம்! | லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த பிரபலங்கள்! | காதலரை கரம்பிடித்த மேகா ஆகாஷ்: சென்னையில் எளிய முறையில் நடந்த திருமணம் | மக்களின் ஆதரவு உற்சாகப்படுத்துது...!: சந்தோஷத்தில் சஞ்சனா | போதை மறுவாழ்வு மையத்தில் ஸ்ரீகுமார் அட்வைஸ்! | பெண் குழந்தைக்கு தாயான ரித்திகா! | சீரியலிலிருந்து விலகியது ஏன்? சாய் காயத்ரி விளக்கம் |
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார். சின்னத்திரை தயாரிப்பாளரான இவர் தன் மருமகன் ஜெயம் ரவி நடித்த அடங்க மறு படத்தை தயாரித்தார். இந்த படம் நல்ல லாபத்தை கொடுத்தது. அடுத்து ஜெயம் ரவியின் 25வது படமான பூமியை தயாரித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு ஜெயம்ரவி
இந்த நிலையில் தற்போது மீண்டும் மருமகன் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார் சுஜாதா. இதனை அறிமுக இயக்குனர் ஆன்டனி இயக்குகிறார், இதில் ஜெயம்ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
ஜெயம்ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார், பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் என்ற படத்திலும், அகமது இயக்கத்தில் இறைவன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்துக் கொடுத்து விட்டு மாமியார் படத்தில் இணைகிறார் ஜெயம்ரவி.