விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

நடிகர் ஜெயம் ரவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனான பொன்னியின் செல்வனாக அருள்மொழி வர்மன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்த பட வெளியீட்டிற்கு முன்பு பல ஊர்களுக்கு சுற்றி புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்து பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை கொட்டியது.
இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு : ‛‛எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உடனடியாக என்னை தனிமைப்படுத்தி அனைத்து கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் தங்களை பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்'' என்றார்.