உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் | சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி |
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தை தயாரித்தது. இதனை கவுதம் மேனன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார் தயாரிப்பாளர். அதாவது சிம்பு பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் இதே நிறுவனம் சிம்பு நடிப்பில் 'கொரோனா குமார்' படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்களது நிறுவனம் சார்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த 'கொரோனா குமார்' என்ற படத்தில் நடிகர் சிம்பு என்ற சிலம்பரசனை நடிக்க ஒப்பந்தம் செய்தோம். இதற்காக அவருக்கு 9.5 கோடி ஊதியம் பேசப்பட்டு அதில் 4.5 கோடியை முன்பணமாக கடந்த 2021ம் ஆண்டு வழங்கினோம். ஆனால் பணம் பெற்றுக்கொண்ட பிறகு அவர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுக்க முன்வரவில்லை. எனவே எங்களது கொரோனா குமார் படத்தை நடித்துக் கொடுக்காமல் அவர் வேறு படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் வேல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த ஆதார ஆவணத்தில் சிம்புவுக்கு ஒரு கோடி கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது வேறு வகையில் மீதி பணம் கொடுக்கப்பட்டதாகவும் அதற்கான ஆவணத்தை தாக்கல் செய்வதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி 1 கோடிக்கான உத்தரவாதத்தை நடிகர் சிம்பு வருகிற செப்டம்பர் 19ம் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.