அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்., 15ல் இந்த படம் வெளியாக உள்ளது. விஷால் நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவர் கூறுகையில், “சூப்பர் ஸ்டார்' என்பது ரஜினிக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பட்டம். 45 ஆண்டுகளாக அவர் சூப்பர் ஸ்டாராக இருப்பது சாதாரண விஷயமல்ல. இந்த வயதிலும் அவர் நடிப்பது எங்களைப் போன்ற நடிகர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர் ஓய்வெடுக்கலாம், ஆனால் மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என நினைப்பதுதான் சூப்பர் ஸ்டாருக்கான அர்த்தம்” என்றார்.
தேசிய விருதில் தமிழ் படங்களின் புறக்கணிப்பு குறித்து கேட்டபோது “என்னை பொறுத்தவரையில், தேசிய திரைப்பட விருதுகள் உள்பட எந்த விருதுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. 4 பேர் அமர்ந்து ஒருவருக்கு விருது என தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு விருது அளிப்பது ரசிகர்கள்தான். ஒரு குழு சார்ந்த ஆலோசனைதான் தேசிய விருதுகளின் பட்டியல்” என்றார்.