தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! |

'லெகஸி' என்ற வெப் தொடர் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகி உள்ளது. இந்த தொடர் தமிழில் தயாராகி பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதில் மாதவன், நிமிஷா சஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக், குல்ஷன் தேவையா, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாருகேஷ் சேகர் என்பவர் இயக்கி உள்ளார்.
சக்தி வாய்ந்த கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்தை நடத்தும் ஒரு பெரியவர் தனக்கு பிறகு தனது சாம்ராஜ்யத்தை ஆள தகுதியான ஒருவரை தேடுகிறார். அந்த இடத்தை அடைவதற்கு மாதவனும், நிமிஷாவும் நடத்தும் போட்டிதான் கதை. முதன் முதலாக லேடி கேங்ஸ்டராக நிமிஷா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
தொடர் குறித்து மாதவன் கூறும்போது, "ஒரு கதை கேட்கும்போது உங்களுக்குள் இருக்கும் நடிகரை அந்தக் கதை சந்தோஷப்படுத்தும்போது நிச்சயம் அதில் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். அப்படித்தான், நான் 'லெகஸி' சீரிஸிலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்திய ஓடிடி தளத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு சிறப்பான கதை மற்றும் திருப்பத்துடன் இது உருவாகி இருக்கிறது. இயக்குநர் சாருகேஷ் சேகர், ஸ்டோன் பென்ச் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி" என்றார்.
நிமிஷா சஜயன், கூறும்போது, "எமோஷன், த்ரில் ஆகியவை கொண்ட இந்தக் கதையில் அற்புதமான குழுவினர் பணியாற்றியுள்ளனர். இரண்டாவது முறையாக ஸ்டோன் பென்ச் நிறுவனத்துடன் பணியாற்றி இருக்கிறேன். எங்கள் இயக்குநர் சாருகேஷ் மற்றும் அவரது திறமையான குழுவினர் பார்வையாளர்கள் விரும்பும்படியான அற்புதமான கதையை கொடுத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை" என்றார்.