கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நடிகர் மாதவன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்தி படங்கள், வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். தற்போது ‛ஆப் ஜெய்சா கோய்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக தங்கல் பட புகழ் பாத்திமா சனா ஷேக் நடித்திருக்கிறார். விவேக் சோனி இயக்கி உள்ளார். இந்தவாரம் ஜூலை 11ல் நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சமீபத்தில் மாதவனை சந்தித்தபோது அவர் அளித்த பேட்டி....
‛ஆப் ஜெய்சா கோய்' படம் பற்றி கூறுங்கள்?
மனிதநேயம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றி இப்படம் பேசுகிறது. வயது இடைவெளி காதல் தான் படத்தின் ஒரு வரிக்கதை. இந்தக் கதை உறவுகளின் ஆழம், சமூகத்தில் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காட்டும். நிச்சயமாக ரசிகர்களை சிந்திக்க வைக்கும்.
இந்த படத்தில் உங்கள் வேடத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டீங்க அல்லது மெனக்கெட்டீங்க.?
இதில் என் கேரக்டர் பெயர் ஸ்ரீ ரேணு, சமஸ்கிருத ஆசிரியர். வெளியிலிருந்து பார்ப்பதற்கு என் ரோல் கடினமானவராகவும், உள்ளே மிகவும் உணர்ச்சி வசப்படுபவராகவும் அமைந்துள்ளது. இதில் நடிப்பது பெரிய சவாலாக இருந்தது. கதையை படித்து, கேரக்டரை புரிந்து, இயக்குனர் உடன் அதிக நேரம் செலவிட்டு நடித்தேன். வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் புறக்கணிக்கும் நபர்கள்தான் நம்மை அதிகம் புரிந்து கொள்கிறார்கள் என்பதை எனது கதாபாத்திரம் உங்களுக்கு புரிய வைக்கும்.
பாத்திமா சனா ஷேக் உடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
பாத்திமா திறமையான, அர்ப்பணிப்புள்ள ஒரு சிறந்த நடிகை, தனது பாத்திரத்தை சிறப்பாக செய்ய கடுமையாக உழைக்கிறார். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அவரது எனர்ஜி லெவல் எப்போதும் அற்புதமானது.
ஆண்களை விட பெண்களுக்கு உங்களை அதிகம் பிடிக்கிறது. அதுபற்றி உங்கள் கருத்து?
இல்லை, இல்லை அது உண்மையல்ல. பெண்கள் தான் என்னை அதிகம் விரும்புவதாக முன்பு நானும் நினைத்தேன். பின்னர் ஒரு நாள், நான் எனது சமூகவலைதளத்தை பார்த்தபோது என்னைப் பின்தொடர்பவர்களில் பெரும்பாலோர் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பதையும், அவர்களில் 75 சதவீதம் பேர் ஆண்கள் என்பதையும் கண்டறிந்தேன். இந்த 75 சதவீத ஆண்கள் என் பதிவுகளுக்கு ஒருபோதும் கருத்து தெரிவிப்பதில்லை. அவர்கள் அமைதியாக என் பதிவுகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மறுபுறம், எனது ரசிகர்களில் 25 சதவீத பெண்கள், எனது பதிவுகளில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மாதவன் தெரிவித்தார்.