சரவண விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‛டியர் ரதி' | 75வது பிறந்தநாள்: எங்கு இருக்கிறார் ரஜினிகாந்த்? | பிளாஷ்பேக் : சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி, பத்மினி, சாவித்திரி | பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா | படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் | 'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை |

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையில் ‛ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்' என்ற படத்தை இயக்கி, நடித்திருந்தார் மாதவன். 2022ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் தற்போது மோட்டார் விஞ்ஞானி ஜி.டி .நாயுடுவின் வாழ்க்கை வரலாறு கதையிலும் தற்போது நடித்து வருகிறார் மாதவன். ஜிடிஎன் என்று டைட்டில் வைத்திருக்கும் இந்த படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார். இவர் சுசிகணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படத்தில் நடித்தவர். லேட்டஸ்ட்டாக வெளியான ஓஹோ எந்தன் பேபி படத்தை இயக்கியவர்.
ராக்கெட்ரி படத்தை தயாரித்த நிறுவனங்களே இந்த படத்தையும் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் முதல் பார்வை டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், தலையில் முடி இல்லாத வழுக்கை தலை கெட்டப்பில் உள்ளார் மாதவன்.
படம் குறித்து கிருஷ்குமார் கூறுகையில், ‛‛ 'ஜி.டி.நாயுடு கேரக்டருக்கு மாதவன் பக்காவாக பொருந்தி இருக்கிறார். அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார். அதற்காக இரண்டரை மணி நேரம் மேக்கப் போட்டார். இந்த படத்தில் ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராயைா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். கோவையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த ஆண்டு கோடைக்கு படம் ரிலீஸ்'' என்றார்.