ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

மலையாள திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை காவ்யா மாதவன். தமிழில் ‛என் மன வானில், காசி' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் திலீப் உடன் இணைந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அதனால் இருவர் பற்றி அதிகம் கிசுகிசுகளும் எழுந்தன. இதன் காரணமாகவே நடிகர் திலீப் அவரது மனைவி மஞ்சு வாரியர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை காவ்யா மாதவனையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே நடிகர் திலீப்புக்கு மஞ்சு வாரியாருக்கும் பிறந்த மீனாட்சி என்கிற மகளும் தற்போது இவர்கள் குடும்பத்துடன் தான் வசித்து வருகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மஞ்சு வாரியரின் தாயார் பிறந்தநாளும் மகள் மகாலட்சுமியின் பிறந்தநாளும் ஒரே நாளில் தான் வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரின் பிறந்த நாளையும் ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நடிகை காவ்யா மாதவன். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.