Advertisement

காவ்யா மாதவன்

Birthday
19 Sep 1984 (Age )

கேரள மாநிலம் நீலேஸ்வரத்தில் பிறந்த இவர் 1991ம் ஆண்டு மலையாளத்தில் கமல் நடித்த பூக்காலம் வரவயி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த காவ்யா மாதவன், 1999ம் ஆண்டு திலீப்புடன் சந்திரனுடிக்குன்னா திகில் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். 18 படங்களில் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார். மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடனும் இவர் நடித்துள்ளார். தமிழில் 2001ம் ஆண்டு காசி படத்தில் நடித்தன் மூலம் பலராலும் பேசப்பட்ட இவர் தொடர்ந்து என் மன வானில், சாது மிரண்டால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒன் வே டிக்கெட் என்ற படத்திற்காக பாடல் ஒன்றே எழுதி உள்ள இவர், பல படங்களில் பின்னணியும் பாடி உள்ளார்.