கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
பிரபல நட்சத்திர தம்பதியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை காவ்யா மாதவன் தம்பதி. சினிமாவில் ஜோடியாக நடித்த காலத்திலேயே இவர்கள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஜோடியாக இருந்தார்கள். நடிகர் திலீப், நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்து மீனாட்சி என்கிற ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்தார். அதேபோல காவ்யா மாதவனும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மிக குறுகிய காலத்திலேயே திருமண பந்தத்தை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இந்த நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் ஏற்கனவே அமுங்கி இருந்த காதல் மீண்டும் துளிர்விட்டு அடுத்த சில மாதங்களிலேயே இருவரும் திடீரென திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை சென்றது. இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. திலீப்-மஞ்சு வாரியரின் மகளான மீனாட்சியும் இந்த தம்பதியுடன் தான் இப்போது வரை வசித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக நடிகர் திலீப் ஒரு நடிகையின் கடத்தல் தொடர்பான வழக்கில் சிக்கி சிறை சென்றது, அப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கும் திலீப் நடிகை மஞ்சு வாரியரை விட்டு பிரிவதற்கும் கூட காரணமாக காவ்யா மாதவன் விமர்சிக்கப்பட்டது, திலீப்பின் படங்கள் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது என ஒரு பக்கம் விமர்சனங்களையும் சரிவுகளையும் திலீப் சந்தித்தாலும் இந்த காதல் ஜோடி எட்டாம் வருட திருமண கொண்டாட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து காவியா மாதவன் தானும் கணவர் திலீப்பும் வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.