குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் நடித்த 10க்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தையும் தேடித்தந்தது. அந்த பத்து நடிகர்களில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகர் கணபதி. இவர் கடந்த சனியன்று நள்ளிரவில் கேரளாவில் உள்ள அங்கமாலி என்கிற இடத்தில் இருந்து கலமசேரி என்கிற இடத்திற்கு கார் ஓட்டி சென்றுள்ளார். சிக்னல்களை மதிக்காமல் வெகு வேகமாக அவர் ஓட்டிச் சென்ற காரை அத்தாணி மற்றும் ஆலுவா உள்ளிட்ட இடங்களில் போலீசார் நிறுத்த சொல்லியும் அவர் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
ஒரு வழியாக அவரை கலமசேரியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது விதிமீறல்களுக்காகவும் மது போதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சமீப காலமாக இப்படி மலையாளத்தில் பல இளம் நடிகர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதும் அதனால் அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.