'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

கடந்த வருடம் மலையாளத்தில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்கிற திரைப்படம் வெளியாகி, மலையாள சினிமாவில் அப்போதைய நிலையில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றது. சிதம்பரம் என்பவர் இயக்கி, 'கூலி' புகழ் சவுபின் சாஹிர் தயாரித்து நடித்த இந்த படம் பெரிய அளவில் பிரபலமில்லாத 10 நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது..
இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சிதம்பரம் தற்போது 'பாலன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்சன் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது, இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதெல்லாம் தற்போது வரை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருக்கிறார்கள்.
மஞ்சும்மேல் பாய்ஸ் அதன் மூலமாக பாலிவுட் பிரபலங்களிடமும் இயக்குனர் சிதம்பரம் பாராட்டைப் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் சிதம்பரம் தனது பாலன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருந்தபோது ஏதேச்சையாக அங்கு வருகை தந்த பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு அந்த படத்தில் இருந்து ஒரு சிறிய காட்சியை போட்டு காட்டி இருக்கிறார் சிதம்பரம். அதை பார்த்து பிரமித்து போன ராம்கோபால் வர்மா, “சிறிய ஒரு துண்டு காட்சியை தான் பார்த்தேன். பாலன் திரைப்படம் அற்புதத்திற்கு அப்பாற்பட்டது” என்று சிலாகித்துக் கூறியுள்ளார்.




