Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம்

16 ஜன, 2026 - 06:15 IST
எழுத்தின் அளவு:
OTT-companies-that-dont-care-about-small-films-Vasanthabalan-Kattam
Advertisement

சாட்டிலைட் டிவி உரிமையை விடவும் அதிக விலைக்கு விற்கப்படுபவை ஓடிடி உரிமைகள். கடந்த சில வருடங்களாக ஓடிடி உரிமை விலையை நம்பியே சில படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், சாட்டிலைட் டிவி நிறுவனங்கள் கூட சிறிய படங்களை வாங்கியுள்ளன. அதே சமயம் ஓடிடி நிறுவனங்கள் சிறிய படங்களை கண்டு கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு ஓரிரு வருடங்களாக அதிகம் ஒலிக்கிறது.

பொங்கலை முன்னிட்டு தான் வாங்கியுள்ள சில தமிழ்ப் படங்களைப் பற்றிய அறிவிப்பை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நேற்று வெளியிட்டது. அவற்றில் முன்னணி நடிகர்களின் படங்கள்தான் இருந்தன. எந்த ஒரு சிறிய படமும் இடம் பெறவில்லை.

இது குறித்து 'வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில், அநீதி' ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் காட்டமாக ஒரு பதிவை பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சிறு தயாரிப்பாளர்களுக்கு, புதிய, மத்திம நாயகர்களுக்கு, புதிய அலை இயக்குநர்களுக்கு, திரையரங்குகளும் கிடைப்பதில்லை. ஓடிடி இணையங்களும் இல்லை. தொலைக்காட்சி சேனல்களும் இல்லை. படத்தை எடுத்து வைத்து கொண்டு கோடம்பாக்கத்தின் வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வேண்டியிருக்கிறது. ஓட ஓட சினிமாவை விட்டு விரட்டுகிறார்கள், முட்டி மோதி மண்டை உடைந்து தெருவில் கிடக்க வேண்டும். அது தான் அவர்களின் எதிர்பார்ப்பு.

பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய கதாநாயகர்களுக்கு மட்டுமே எல்லா கதவுகளும் திறக்குமென்றால் இங்கே ஜனநாயகம் எங்கேயிருக்கிறது.? நல்ல திரைப்படம், அழகான கவித்துவமான கதை, நல்ல திரைக்கதை என்பதெல்லாம் பேச்சேயில்லை.

பெரு நிறுவனப்படங்களை பெரிய நடிகர்களின் திரைப்படங்களை மட்டுமே வாங்குவோம் மற்றவர்களெல்லாம் வெளியேறுங்கள் என்கிறது நெட்பிளிக்ஸ் போன்ற இணையங்களும், தொலைக்காட்சி சேனல்களும்,திரையரங்குகளும். சொந்த நாட்டிலே அகதியாக நிற்பது போன்ற ஒரு நிலை. நான்கு வருடங்களாக படம் இயக்க முடியாத நிலை. இயக்கினாலும் எங்கே விற்பது ? யாரிடம் சென்று கையேந்தி நிற்பது ? யார் வாங்குவார்கள் ? எங்கு திரையரங்கு கிடைக்கும் என்றொரு பரிதாபமான நிலை.

எனக்கு மட்டுமில்லை. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் தொண்ணூறு சதவீதத்தினரின் நிலமை இதுவே. நெட்பிளிக்ஸ் எல்லா ஆண்டுகளும் புதிய படங்களை, சிறிய படங்களை, நல்ல இயக்குநர்களின் திரைப்படங்களைப் புறக்கணிக்கிறது. போன ஆண்டு நெட்பிளிக்ஸ் வாங்கிய திரைப்படங்களின் தரங்களை நீங்களே இணையத்தில் தேடிப்பாருங்கள். ஒரு சிறு தயாரிப்பாளராக தேசிய விருது பெற்ற இயக்குநராக நெட்பிளிக்ஸ்க்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல்பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் ... 'நெப்போ கிட்ஸ்' : தமிழ் சினிமாவில் மீண்டும் எழுந்த சர்ச்சை 'நெப்போ கிட்ஸ்' : தமிழ் சினிமாவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap