ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியிருந்தார் ரிஷப் ஷெட்டி. இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான், அடுத்து இயக்கி நடிக்கப் போவதாக கூறியிருந்தார் ரிஷப் ஷெட்டி. படத்திற்கு 'காந்தாரா ; சாப்டர் 1' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதி (நேற்று முதல்) இதன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு ஓரிரு நாட்கள் முன்பாக படக்குழுவினர் பயணம் செய்த பேருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் விபத்திற்குள்ளானது. நல்லபடியாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதனால் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டு விட்டது போல ஒரு செய்தி கிளம்பி விட்டது.
ஆனால் குறித்த நேரத்தில் நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் அக்டோபர்-2ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி எந்த தடங்கலும் இல்லாமல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.