நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

சமீபத்தில் மலையாள திரையுலக நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக வெற்றி பெற்று பொறுப்பேற்றார். இத்தனை வருடங்களில் தலைமை பொறுப்புக்கு வரும் முதல் பெண் இவர் தான். இந்த நிலையில் தற்போது புதிய நடிகர் சங்கத்தின் முதல் நிர்வாக குழு கூட்டத்தை கூட்டிய ஸ்வேதா மேனன், இதில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதாவது மீ டு பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிய சமயத்தில் தொடர்ந்து சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, நடிகர் சங்கத்தில் உள்ள பெண் உறுப்பினர்களிடம் கருத்து கேட்பதற்காக பிரபல ஹோட்டல் ஒன்றில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பெண் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு அந்த மெமரி கார்டு காணாமல் போய்விட்டது என அப்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் அலட்சியமாக கூறினார்கள். இந்த நிலையில் தான் சம்பந்தப்பட்ட அந்த ஹோட்டலில் நடைபெற்ற கூட்டம் தொடர்பான மெமரி கார்டு காணாமல் போன விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு கமிட்டி ஒன்றை அமைத்துள்ள ஸ்வேதா மேனன், இந்த விவகாரத்தை தாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.