Advertisement

சிறப்புச்செய்திகள்

கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன்

22 ஜன, 2026 - 12:04 IST
எழுத்தின் அளவு:
Shweta-Menon-brought-the-memory-card-issue-to-an-end-through-investigation
Advertisement


மலையாள திரையுலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கடந்த 2018ல் 'மீ டூ' பிரசாரம் மூலம் நடிகைகள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்னைகளை வெளியிட்டு வந்தனர். அதுகுறித்து ஹோட்டல் ஒன்றில் பல நடிகைகளை அழைத்து அவர்களது மீ டூ அனுபவங்கள் குறித்து நடிகர் சங்கத்தால் விரிவாக கேட்கப்பட்டு அது வீடியோவாகவும் ரெக்கார்ட் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின் கடந்த 2025ல் அந்த மெமரி கார்டு காணாமல் போன விவகாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போது நடிகர் சங்க பொறுப்பில் இருந்த நடிகை குக்கு பரமேஸ்வரனிடம் தான் அந்த மெமரி கார்டு கடைசியாக ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் அதை தனது சுய லாபங்களுக்காக மறைத்து விட்டார் என்றும் கடந்த நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் நடிகர் சங்க பொதுச் செயலாளராக குக்கு பரமேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில் இந்த மெமரி கார்டு குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று ஸ்வேதா மேனன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அந்த குழுவினரின் விசாரணையில், அந்த மெமரி கார்டு 2018ல் மறைந்த குணச்சித்திர நடிகை கேபிஏசி லலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குக்கு பரமேஸ்வரன் மீதான குற்றச்சாட்டு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது, அதேசமயம் கேபிஏசி லலிதா மறைந்து விட்டதால் அந்த மெமரி கார்டு குறித்து என்ன செய்யலாம் என அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம்அமைச்சர் வாக்குறுதி ; வேலை ... மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

23 ஜன, 2026 - 08:01 Report Abuse
Dandanakka அப்போ அந்த Memory Card கிடைச்ச மாதிரி தான். ஊதி மூடியாச்சு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap