300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' |
ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தித் திரைப்படம் 'வார் 2'. இப்படத்தைத் தெலுங்கு, தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். தமிழில் இந்தப் படத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஜுனியர் என்டிஆர் நடித்ததால் தெலுங்கில் ஓரளவு பார்க்கப்பட்டது. இருந்தாலும் அங்கு 60 கோடிக்கும் சற்றே கூடுதலாக மட்டுமே வசூலித்தது. அங்கு இன்னும் 50 கோடி வசூலித்தால்தான் படம் லாபத்தைப் பெற முடியும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் மொத்தமாக 300 கோடி வசூலை இந்தப் படம் கடந்துள்ளது. ஆனாலும், இன்னும் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தால்தான் படம் லாபத்தை அடையும் என்கிறார்கள். ஜுனியர் என்டிஆரின் பத்து வருட தொடர் வெற்றியை இந்தப் படம் நிறுத்திவிட்டது. இதனால், அவரது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். இனி, ஹிந்திப் படங்களில் ஜுனியர் என்டிஆர் நடிக்கவே கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பவன் கல்யாண், விஜய் தேவரகொன்டா, ஜுனியர் என்டிஆர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் தெலுங்கில் தோல்வியைத் தழுவி வருகின்றன.