அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் பிரியதர்ஷன். கிட்டத்தட்ட 100 படங்களை இவர் தொடப் போகிறார். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹிந்தியில் கூட படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக ஹிந்தியில் தொடர்ந்து அக்ஷய் குமார் உள்ளிட்ட நடிகர்களை வைத்து அதிகமாக படம் இயக்கியுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் ஹிந்தியில் இயக்கி வரும் படம் 'ஹைவான்'.
இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைப் அலிகான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கடந்த 2008ல் வெளியான ‛தஷன்' என்கிற படத்திற்குப் பிறகு 17 வருடங்கள் கழித்து இவர்கள் மீண்டும் பிரியதர்ஷன் படத்திற்காக இணைந்துள்ளனர் என்பது ஒரு ஆச்சர்ய தகவல். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது. படத்தின் கதையும் கேரளா சம்பந்தப்பட்டது என்பதால் பிரியதர்ஷன் தற்போது கேரளாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.