போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன், மலையாளத்தில் படங்களை இயக்கி வரும் அதேவேளையில் ஹிந்தியிலும் சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். தற்போது ஹிந்தியில் ‛ஹைவான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இது மலையாளத்தில் அவர் மோகன்லாலை வைத்து இயக்கிய ‛ஒப்பம்' படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைப் அலிகான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
படத்தின் கதை கேரளா சம்பந்தப்பட்டது என்பதால் பெரும்பாலான படப்பிடிப்பு கொச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரியதர்ஷினின் ஆஸ்தான ஹீரோவான மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் தற்போது நடிக்கிறார். இவர் இந்த படத்தில் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்த புகைப்படம் இருந்து தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகி உள்ளது.