சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

90களுக்கு பின்னால் வந்த இசையமைப்பாளர்களுக்கு எப்படி இளையராஜா ஒரு மானசீக குருவாக இருந்தாரோ அதேபோல இன்றைய இசையமைப்பாளர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை என்று சொல்லலாம். அந்த வகையில் பிரபல மலையாள இசையமைப்பாளர் சுசின் ஷியாம், தனது பேட்டிகளில் எல்லாம் ஏ.ஆர்.ரஹ்மானை தனது மானசீக குருவாக புகழ்ந்து பேசி வருபவர். கடந்த வருடம் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர்.
இந்த நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பின் தொடர ஆரம்பித்துள்ளார். இதை பார்த்ததும் ரசிகராக மாறி உற்சாகத்தில் துள்ளி குதித்த சுசின் ஷியாம், “நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் இதுதான் முதன்முதலாக என்னுடைய ரசிக தருணம். உங்களுடைய அன்பான மெசேஜால் உண்மையிலேயே பெருமை அடைந்தேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சுசின் ஷியாம்..