டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா |

மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் அவரது 19வது படமாக 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். யஷ் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் கதாநாயகியாக கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் படமாக்கி வருகின்றனர். இப்படம் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெறவில்லை. ஏற்கனவே இந்த படத்தில் இசையமைப்பாளர் ஆக அனிரூத் இணைந்து இசையமைத்து வந்தார். தற்போது அனிரூத் இந்த படத்திற்கு பாடல்கள் மட்டும் தான் இசையமைத்து தருகிறார். இந்த படத்தின் பின்னனி இசை அமைக்க கே.ஜி.எப் 1, 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்த ரவி பசூர் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.