மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

இந்தியத் திரையுலகத்தில் மார்ச் 19, 2026 ஒரு முக்கியமான நாளாக போட்டியானதாக அமையும் என சில வாரங்கள் முன்பு வரை இருந்தது. 2025ல் வெளியான 'துரந்தர்' படம் 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'துரந்தர் த ரிவெஞ்ச்' படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
'கேஜிஎப் 2' படத்தின் மூலம் 1000 கோடி வசூலை கன்னட சினிமாவிற்கு முதன்முதலில் அமைத்துக் கொடுத்த யஷ் நடித்த 'டாக்சிக்' படமும் அதே மார்ச் 19ம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென படத்தின் வெளியீட்டை ஜூன் 4ம் தேதிக்குத் தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
'துரந்தர் தி ரிவெஞ்ச்' படத்தின் வரவேற்பு தங்கள் படத்திற்கு பாகதமாக அமையும் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்தனர். அது போலவே தற்போது நடந்துள்ளது. மாபெரும் வரவேற்புடன் அப்படம் தென்னிந்திய மாநிலங்களிலும் ஓடி வருகிறது. அதனால், 'டாக்சிக்' படம் 'கிரேட் எஸ்கேப்' ஆகிவிட்டதாக கன்னடத் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.
அதேசமயம் அதை சரியாக கணிக்காத 'உஸ்தாத் பகத் சிங்' தயாரிப்பாளர்கள் அப்படத்தை மார்ச் 19ல் வெளியிட்டனர். தற்போது 'துரந்தர்' வரவேற்பில் இப்படம் சிக்கித் தவித்து வருகிறது.