'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

சில சமயங்களில் பள்ளி அல்லது கல்லூரி தேர்வுகளில் அவ்வளவு ஏன் டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளில் கூட சம்பந்தமே இல்லாமல் சினிமா நடிகர்களை பற்றிய கேள்விகள் இடம்பெற்று அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவதை பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் கேரளாவில் பிளஸ் 2 மாதிரி வினாத்தாளில் மோகன்லாலின் திரையுலக பயணம் பற்றி விரிவாக எழுதுக என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கேள்வித்தாளில் மோகன்லால் குறித்து அவரது அறிமுகப்படம் முதல் தற்போது நடித்து வரும் 'ஜெயிலர் 2' படம் உள்ளிட்ட சில தகவல்கள் இனைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த தகவல்களை மையப்படுத்தி மோகன்லால் பற்றி கட்டுரை எழுதும்படி மாணவர்களுக்கு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது கேள்வித்தாள் தயாரித்த யாரோ ஒரு ஆர்வக்கோளாறு நபரால் கேட்கப்பட்ட கேள்வியா என்றால் அதுதான் இல்லையாம். மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும்போது அதிகம் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அவர்களை மன அழுத்தம் இன்றி ரிலாக்ஸ் ஆக தேர்வு எழுத வைக்கும் முயற்சியாக இது போன்ற கேள்வி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




