'கருப்பு' ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா | மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன் | 'ஜனநாயகன்' பிரச்னை.. எனக்கு சொல்ல தைரியமில்லை: எச்.வினோத் ஓபன் டாக் | பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார் | ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில் | விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்' | ''சென்னை என் தாய்வீடு'': ராம்சரண் பேச்சு | நான் நடந்தால், பேசினால் சாதனைதான்: சிம்பொனி நிகழ்ச்சியில் இளையராஜா | ஸ்ரீதேவியுடன் நடித்தேன், அவர் மகளுடனும் நடித்து விட்டேன் : ரவிகிஷன் பெருமிதம் | ஸ்பை திரில்லரான 'ஆல்பா' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஆலியா பட் |

கன்னட சினிமாவில் குணசித்ர நடிகையாக வலம் வந்தவர் ரஷ்மி லீலா. பிராணா, கிராம தேவதே, சிஹி முத்து உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கன்னட டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமானார். சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருந்து வந்தார்.
37 வயதான ரஷ்மி லீலா, கடந்த 2019ம் ஆண்டு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும் நடந்தது. அதன்பிறகு அவரது உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இது கன்னட சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட திரையுலகினர் ரஷ்மியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




