என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை | 30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ் | திலீப் படத்தில் 'கில்லி' கனெக்சன் ; உறுதி செய்த மோகன்லால் | குழப்பத்தில் தமிழ்ப் படங்களின் வெளியீடுகள் : கோபத்தில் தியேட்டர்காரர்கள் | ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்களில் பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணன் | அகண்டா 2 : சமூக வலைத்தளங்களில் பரவும் 'டிரோல்கள்' | 75, 50, 25 : ரஜினிகாந்த் பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாட்டம் |

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக நடித்து வரும் நிவின்பாலி சமீப காலமாக அங்கே ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க தடுமாறி வருகிறார். அதே சமயம் தமிழிலும் சமீப காலமாக ஆர்வம் காட்டி நடித்து வரும் நிவின்பாலி, ராம் இயக்கத்தில் நடித்த 'ஏழு கடல் ஏழு மலை' ரிலீஸுக்காக காத்திருக்கிறது. அடுத்ததாக தற்போது 'ரெமோ, சுல்தான்' பட பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் 'பென்ஸ்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் நிவின்பாலி. இந்த படத்தில் 'வால்டர்' என்கிற ஒரு முரட்டுத்தனமான அதே சமயம் கொஞ்சம் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நிவின்பாலி.
அதுமட்டுமல்ல, இந்த படத்தில் தன்னை நடிக்க அழைத்தது இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு அல்ல என்றும், வேறு ஒரு கதாபாத்திரத்திற்காக தான் என்றும் ஒரு புதிய தகவலை தற்போது கூறியுள்ள நிவின்பாலி, ஆனால் கடைசியில் என்னை இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி விட்டார்கள் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணும் நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் நிவின்பாலி முதலில் நடிக்க அழைக்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் தான் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.