பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

'ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த முடித்துள்ள படம் 'கருப்பு'. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது. இதே நாளில் சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூட்டணியில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த 'மத கஜ ராஜா' படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் கார்த்தியை வைத்து தான் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதால் அவருக்கு பதிலாக அடுத்து விஷாலை இயக்கப் போகிறார் சுந்தர்.சி. இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடித்து அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. தற்போது நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் -2' படம் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நவம்பர் மாதம் விஷால் நடிக்கும் புதிய படத்தை தொடங்குகிறார் சுந்தர்.சி.