நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' என்ற படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன் பிறகு 'ஜீவா, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், லால் சலாம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது ஏற்கனவே தான் நடித்த 'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஷ்ணு விஷால் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''என்னுடைய திரைப்படங்களை எதிர்பார்த்து எத்தனை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. என்றாலும் என்னுடைய படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய ஒரு சூழலை நான் உருவாக்குவேன். அந்த காலம் கண்டிப்பாக ஒருநாள் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதை கருத்தில் கொண்டு தான் தற்போது எனது புதிய படங்களின் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணிபோஜன் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் அக்டோபர் 31ல் வெளியாகிறது. இப்படத்தை பிரவீண் இயக்கியுள்ளார்.