பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் நடிகர்களின் வாரிசு இயக்குனர்கள் என நடிகர் ரஜினிகாந்த்தின் மகள்களாக ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். “3, வை ராஜா வை” ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. 'கோச்சடையான்' படத்தை இயக்கினார் சவுந்தர்யா. அவர்கள் இருவருக்குப் பிறகு வாரிசு இயக்குனராக வந்துள்ளார் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.
2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்து வெளிவந்த படம் 'வாரிசு'. அப்படி ஒரு தலைப்பில் விஜய்யின் படம் வெளிவந்த ஆண்டில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு பொருத்தமாக வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர்களின் வாரிசுகள், இயக்குனர்களின் வாரிசுகள், நடிகர்களின் வாரிசுகள், நடிகைகளின் வாரிசுகள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் வாரிசுகள் என தமிழ் சினிமாவில் 'வாரிசுகள்' பட்டியலை எடுத்தால் அது ஒரு நீண்ட பட்டியலாக இருக்கும்.
என்னதான் வாரிசு என்றாலும் திறமை இருந்தால் மட்டுமே இங்கு வெற்றி பெற முடியும். சிலரது வெற்றியை வைத்தும், பலரது தோல்வியை வைத்தும் அதைக் கணக்கிடலாம். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவைப் போல நடிகராக அறிமுகமாகாமல், தாத்தாவைப் போல இயக்குனராக வருவது ஆச்சரியமான ஒன்று. ஆனாலும், அவரை படம் இயக்க வைப்பதைவிட நடிக்க வைக்கவே பல தயாரிப்பாளர்கள் எதிர்காலத்தில் முயற்சிப்பார்கள். அப்படி ஒரு நிலை வரும்போது சஞ்சய் என்ன முடிவெடுப்பார் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.