பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து சாதித்த நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிட வேண்டியவர்கள் சந்தானம், யோகிபாபு. பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த பிறகுதான் நாயகனாக மாறினார் சந்தானம். ஆனால், காமெடியனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே நாயகனாக மாறி, தொடர்ந்து காமெடியனாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு.
சந்தானம் நடித்து கடைசியாக வெளிவந்த 'டிடி ரிட்டன்ஸ்' படம் வியாபார ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'கிக்' படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இப்படமும் ஒரு காமெடி படம்தான்.
யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள 'லக்கிமேன்' படமும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இவர் இதற்கு முன்பு தனி கதாநாயகனாக நடித்த 'பொம்மை நாயகி' படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதே சமயம் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்த 'ஜெயிலர்' படத்தில் இவரது காமெடி வரவேற்பைப் பெற்றது. அதனால், 'லக்கிமேன்' படத்திற்கு ரசிகர்கள் வர வாய்ப்புள்ளது.
சந்தானம், யோகிபாபு நேரடியாக மோதிக் கொள்வதில் யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறது என்பது இரு தினங்களில் தெரிந்துவிடும்.