வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

நடிகர் கூல் சுரேஷ் நடிக்கும் 'உள்ளே செல்லாதீர்கள்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சந்தானம் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பேசும்போது, ''இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை எப்படி வெளியிடுவது என்று சஸ்பென்சாக வைத்திருந்தேன். என்னிடம் பலரும் கேட்டார்கள், நீங்களே பல படங்களுக்குள் சென்று விளம்பரப்படுத்துகிறீர்கள். நீங்களே வெளியிடுவது தானே என்று கேட்டார்கள்.
நான் எதுவும் பேசாமல் இருந்தேன். இப்போதுதான் அந்த சஸ்பென்ஸ் உடைந்துள்ளது. என் மீது எவ்வளவு குற்றம் குறைகள் இருந்தாலும் எனது தாய் தந்தைக்குப் பிறகு என் மீது அன்பும், நான் வளர வேண்டும் என்கிற நல்லெண்ணமும் கொண்டவர் நண்பர் சந்தானம். அவர் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று இங்கே நான் வந்திருக்கிறேன். அவர் எப்போதும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற நல்ல மனதுக்குச் சொந்தக்காரர்.
நான் எங்கு பேசினாலும் என்னை இவன் சந்தானத்தின் ஆள் என்று தான் சொல்வார்கள். என்றும் நான் அவரது நலம் விரும்பி. அப்படிப்பட்ட சந்தானத்தின் பொற்கரங்களால் நான் கதாநாயகனாக நடித்துள்ள 'உள்ளே செல்லாதீர்கள்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சந்தானம் பேய்ப் படங்களுக்குப் புகழ் பெற்றவர். பேய்கள் கஷ்டப்பட்டாலும் கூட பேய்களுக்குப் பென்ஷன் வாங்கித் தருபவர் அவர். அப்படிப்பட்டவர் வெளியிடுவதில் மகிழ்ச்சி'' என்றார்.
சந்தானம்
சந்தானம் பேசுகையில், ''கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தைக் கேள்விப்படும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அவர் கதாநாயகனாக நடித்துள்ள மூன்றாவது படம். 'உள்ளே செல்லாதீர்கள் 'என்ற தலைப்பைப் பார்த்து விட்டு வேறு எதுவும் நினைக்காதீர்கள். படத்தை நம்பி உள்ளே சென்றால் சந்தோஷப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். பேய்க் கதைகளைப் படமாக எடுக்கும் போது மினிமம் கேரண்டி உள்ளவை. எனவே அந்த வழியில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். புதிய இயக்குநர், தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள்.
கூல் சுரேஷைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் இருவரும் 'காதல் அழிவதில்லை' என்ற டி ஆர் படத்தில் துணை நடிகராக நுழைந்து கஷ்டப்பட்டு மெல்ல மெல்ல மேலே வந்தவர்கள். நிறைய பேர் சினிமாவில் வந்து போராடிவிட்டு முடியவில்லை என்று மனரீதியாக சோர்வு அடைவதை நாம் பார்க்கிறோம். ஆனால் கூல் சுரேஷ் அப்படிப்பட்டவர் அல்ல. சுரேஷ் இருபது வருடமாக போராடி எவ்வளவு பேர் என்ன என்ன சொன்னாலும் கேலி செய்தாலும் கிண்டல் செய்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.
சொல்வதை கேட்க மாட்டான்
யார் எதைப் பற்றிக் கூறினாலும் கவலைப்படாமல் நாம் எதை நோக்கிச் செல்கிறோமோ அந்தப் பாதையில் உறுதியாக செல்ல வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் இருக்கிறார். நான் கூட சில நேரம் இது வேண்டுமா வேண்டாமா என்று சற்று தடுமாற்றம் அடைவேன். ஆனால் சுரேஷ் செய்யலாம் என்று உறுதியாக இருப்பார். இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ஆதரவு கொடுங்கள். இதன் மூலம் கூல் சுரேஷுக்கு நான் இந்த அறிவுரையும் கூறப்போவதில்லை. ஏன் என்றால் அறிவுரை கூறினால் அவன் கேட்க மாட்டான். அவன் போக்கிலே அவன் போகட்டும் அதுதான் நல்லது.
சில நேரம் நான் சொல்வதைக் கூட அவன் கேட்க மாட்டான். அவன் எதை நோக்கிச் செல்கிறானோ அதில் போவான் கண்டிப்பாக அடைவான். சினிமா மட்டுமல்ல எந்த ஒரு விஷயமும் கிடைக்கவில்லை என்றால் பெரிய மன அழுத்தத்துக்குச் சென்று விடுகிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி செல்ல வேண்டிய பாதையைப் பார்த்து செல்கிற விஷயத்தை கூல் சுரேஷிடம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். இருபது வருடங்களுக்கு முன்பு டி.ஆர் சாரிடம் நாங்கள் இருவரும் ஆடிஷன் சென்றிருந்தோம். என்னை முதலில் மிருதங்கம் வாசிப்பது போல் நடிக்கச் சொன்னார். நான் சரியாக வாசிக்கவில்லை என்று விட்டுவிட்டார். இவன் சரியாக வாசித்தான். இவனை அவர் தேர்வு செய்து விட்டார். அப்படிப்பட்ட நண்பனுக்கு வாழ்த்துக்கள். அனைவரும் ஆதரவு கொடுங்கள்'' என்றார்.




