'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

இப்போது தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. கோவில்பட்டி பகுதியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்நிலையில் 'ஓ மை கடவுளே, டிராகன்' படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கப் போகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க உள்ளது. அதில் ஹீரோயினாக மிருணாள் தாக்கூர், இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் காமெடியனாக நடிக்க சந்தானத்திடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
'பார்க்கிங்' பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படத்தில் சந்தானம் கமிட் ஆகி இருந்தார், அந்த படம் டிராப்பாக இந்த படத்தில் அவரை கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது. தனுசுடன் கிசுகிசுக்கப்பட்டவர் மிருணாள் தாக்கூர். தனுஷின் அடுத்த படத்தில் அவர் ஹீரோயினாக நடிப்பார் என்னை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்புக்கு ஜோடியாகிறார். அரசன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அஸ்வத் இயக்கும் படத்துக்கு செல்ல இருக்கிறார் சிம்பு.




