ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

2026ம் ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் 44 படங்கள் தியேட்டர்களிலும், 3 படங்கள் ஓடிடி தளங்களிலும் வெளியாகி உள்ளன. இன்று மார்ச் 2 முதல் மாநில பாடத் திட்ட 12ம் வகுப்புத் தேர்வுகள் ஆரம்பமாகின்றன. இருந்தாலும் இந்த வார வெள்ளிக்கிழமையான மார்ச் 6ம் தேதி 9 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
“99/66, காதல் ரீசெட் ரிபீட், முஸ்தபா முஸ்தபா, மூரி, ஓ பட்டர்பிளை, செல்லமடா நீ எனக்கு, வடம், வசூல் மன்னன், யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன்,” ஆகிய படங்கள் வெளியவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 'ஆசை' படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதனால், அப்படம் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
தேர்வு காலமாக இருந்தாலும் குறைந்தபட்ச தியேட்டர்கள் கிடைத்தால் கூட போதும், படங்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இத்தனை படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. கடந்த வாரம் வெளியான படங்களில் 'தாய் கிழவி' படம் மட்டும் இந்த வாரமும் தாக்குப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை படங்களில் எத்தனை படங்களை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்களோ அதற்கேற்றபடிதான் அப்படங்களுக்கும் வரவேற்பு கிடைக்கும்.




