பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' | தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் |

நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இயக்குநர் போயபதி ஸ்ரீனு கூட்டணி, 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர்.
தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் சம்யுக்தா நாயகியாகவும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடித்துள்ளனர். ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் சூழலில், பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால், புரமோஷன் பணிகளையும் விரைவில் படக்குழு துவங்க உள்ளது.




