'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான 'சர்வம் மாயா' திரைப்படம் கிட்டத்தட்ட 150 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாகவே இறங்கு முகத்தில் இருந்த நிவின்பாலியின் மார்க்கெட்டையும் அந்த படம் தூக்கி நிறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் நிவின்பாலி நடித்த 'பேபி கேர்ள்' திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ரசிகர்களின் வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் தற்போது நிவின்பாலி நடிப்பில் உருவாகியுள்ள 'பிரதிச்சாயா' என்கிற படம் வரும் மார்ச் 26ம் தேதி வெளியாகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பை நடிகர் நிவின்பாலியே வெளியிட்டுள்ளார். அரசியல் பின்னணியில் தந்தை, மகன் பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் என்பதுடன் பல கமர்சியலான வெற்றி படங்களையும் கொடுத்தவர் என்பதால் இந்த படமும் நிவின்பாலிக்கு ஓரளவு வரவேற்பை பெற்று தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நான்கு மாதத்திற்குள் நிவின்பாலியின் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாவது என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.