பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தெலுங்கு சினிமாவில் ஆக்சன் கிங்காகவும், வசூல் சக்ரவர்த்தியாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் நந்தபுரி பாலகிருஷ்ணா. இவர் 1974ம் ஆண்டு தனது தந்தை என்.டி .ராமராவ் நடித்த டாட்டம்மா காலா என்ற படத்தில் அறிமுகமானார். அதை அடுத்து இப்போது வரை சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா. இந்த நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தியில், ஆக்சன் கிங், கலெக்ஷன் கிங், டயலாக் டெலிவரி கிங் என்னுடைய அருமை சகோதரர் பாலைய்யா சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து இன்னும் வலுவான இடத்தில் இருக்கிறார். இது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருக்கு நல்ல மன அமைதி, நல்ல ஆரோக்கியம், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைப்பதற்கு கடவுளை வேண்டுகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.




