சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கமல் ஹீரோவாக நடித்த அபூர்வ ராகங்கள் படத்தில் பாண்டியன் என்ற வேடத்தில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பிறகு கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த பல படங்களில் காமெடியன் , வில்லனாக நடித்திருந்தார் ரஜினி. ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனி ஹீரோக்களாக உருவெடுத்த அவர்கள், கடந்த 45 ஆண்டுகளாக எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. கடைசியாக கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த தில்லு முல்லு படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் கமல்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ரஜினி நடிக்கும் 173வது படத்தை கமல் தயாரிக்கிறார். சுந்தர் .சி இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ஏற்கனவே தான் தயாரித்த மகளிர் மட்டும், நள தமயந்தி போன்ற படங்களில் கமல் நடித்துள்ளார். அது அப்போது அந்த படங்களின் வியாபாரத்துக்கு பயன்பட்டது. என்றாலும் இப்போது அவர் தயாரிப்பது ரஜினி படம் என்பதால் இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். அதோடு அடுத்தபடியாக ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் படத்திற்கான கதை கேட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு சரியான பொருத்தமான கதை அமைந்ததும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறுகிறார்கள்.




