'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான அதிவி சேஷ் நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வரும் படம் 'டகாய்ட்'. இந்த படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். படத்தை ஷானியல் டியோ என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து 'ருபாரூ' என்கிற முதல் பாடல் வெளியானது.
இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதைத் தொடர்ந்து தற்போது நாயகன் அதிவி சேஷ், நாயகி மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ள அதிவி சேஷ் கூறும்போது, “ஒவ்வொரு படமும் நம்பிக்கையுடன் தான் உருவாகிறது. வருட கணக்கில் பல பேரின் மிகுந்த உழைப்பில் உருவாக்கி கடைசியில் மக்களிடம் ஒப்படைக்கிறோம். இப்போது திருப்பதியில் இருந்து இதன் பயணத்தை துவக்கி இருப்பது சரியானது என்பது போல் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.




