டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிப்பில் 2015ல் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'தனி ஒருவன்'. அப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஜெயம் ரவி, நயன்தாரா நாயகன், நாயகியாக நடிக்க உள்ளதாக அறிவித்தார்கள். முதல் பாகத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரம் இறந்துவிட்டதால் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க வாய்ப்பில்லை. அந்தக் கதாபாத்திரத்தை விடவும் பவர்புல்லான ஒரு வில்லன் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் 'தனி ஒருவன் 2' படத்தை வாழ்த்தி அரவிந்த்சாமியும், கார்த்தியும் டுவீட் செய்துள்ளனர். “சூப்பர்ப் புரோமோ, குழுவினருக்கு வாழ்த்துகள்,” என அரவிந்த்சாமியும், “நீண்ட நாட்களாக காத்திருந்த அறிவிப்பு மச்சி... உனக்கும் உனது பிக் பிரதருக்கும் வாழ்த்துகள்,” என கார்த்தியும் வாழ்த்தியுள்ளனர். இருவருக்கும் இயக்குனர் மோகன்ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.




