'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ரஜினிகாந்த் நடித்து வெளியான 'ஜெயிலர்' படம் மூன்றாவது வாரத்தைக் கடந்து ஓடி வருகிறது. இப்படம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இதர தென்னிந்திய மாநிலங்களில் மிக அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. அங்கெல்லாம் அதிக வசூலைக் குவித்துள்ள தமிழ்ப் படம் என்ற சாதனையையும் புரிந்துள்ளது.
தெலுங்கில் 75 கோடி, கர்நாடகாவில் 66 கோடி, கேரளாவில் 51 கோடி, இதர வட இந்திய மாநிலங்களில் 15 கோடி என இதுவரையிலும் ரூ.207 கோடி வசூலைக் குவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படம் இதர மாநிலங்களில் இவ்வளவு வசூலைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பும் இந்த சாதனையை ரஜினிகாந்த் நடித்த '2.0' படம்தான் பெற்றிருந்தது.
தமிழ் கதாநாயகர்களைப் பொறுத்தவரையில் மற்ற எந்த நடிகரைக் காட்டிலும் ரஜினியின் படங்களுக்குத்தான் மற்ற மாநிலங்களில் அதிக வரவேற்பு இருக்கிறது என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.