ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய்யின் 68வது படம் உருவாக உள்ளது. 'லியோ' படப்பிடிப்பை முடித்துவிட்டு சிறிது ஓய்விற்குப் பிறகு தற்போது 68வது படத்திற்கான வேலைகளில் விஜய்யும் இறங்கிவிட்டார்.
இப்படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் விஜய் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. அதற்கான 'தோற்றத் தேர்வு' செய்வதற்காக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றுள்ளார்கள். அங்கு ஹாலிவுட் கலைஞர்களால் விஜய்யின் தோற்றத் தேர்வு நடத்த உள்ளார்களாம்.
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் விஜய் செல்வதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். விஜய்யின் 68வது படத்தை பிரம்மாண்டமாக வித்தியாசமான ஆக்ஷன் படமாகத் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.