சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மறைந்த நடிகரும், ஒன்றுபட்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்டி ராமராவ் மகன் நடிகர் பாலகிருஷ்ணா. ஆந்திர மாநில இந்துப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆகவும் இருக்கிறார். அந்த தொகுதியில் 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகத் தேர்வானவர்.
சமீபத்தில் அவர் பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்குரிய முக்கியத்துவத்தை ஆந்திர மாநில அரசு கொடுக்கவில்லை என்ற ரீதியில் அந்த குற்றச்சாட்டு இருந்தது. மேலும், தற்போதைய துணை முதல்வர் பவன் கல்யாணின் அண்ணன், நடிகர் சிரஞ்சீவியைப் பற்றியும் அவர் பேசியதும் சர்ச்சையை அதிகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆந்திர அரசில் அவருக்கு மந்திரி பதவி ஒன்றை அவர் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பவன் கல்யாண் தங்களது கட்சி கூட்டணியில் துணை முதல்வராக இருந்து பெறும் மரியாதை, முக்கியத்துவம் அவரை யோசிக்க வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால், முக்கிய பொறுப்புள்ள துறையை அவர் கேட்பதாகவும் தெரிகிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாலகிருஷ்ணாவுக்கு சகோதரியின் கணவர் மட்டுமல்ல, சம்பந்தியும் கூட. மேலும் சர்ச்சை வளராத வகையில் சந்திரபாபு நாயுடு, பாலகிருஷ்ணாவுக்கு மந்திரி பதவி கொடுப்பார் என்றே அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.