நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம் | சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய் | எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம் | நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர் | பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி | முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி |

நடிகர் தனுஷ் நடிப்பு, இயக்கத்தில் இருதினங்களுக்கு முன் ‛இட்லி கடை' படம் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதையடுத்து ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
தனுஷ் வாத்தி, குபேரா ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு படக்குழு உடன் இணைந்து நடிக்கவுள்ளார். விராடா பர்வம் இயக்குனர் வேணு உடுகுலா இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லாலை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மோகன்லாலிடம் அஜித், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.