சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

ராஜேஷ் எம் செல்வா இயக்கி உள்ள ‛தி கேம்' என்ற வெப்சீரிஸில் நடித்து இருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் அளித்த பேட்டியில், ''சினிமாவில் பத்தாண்டுகளை கடந்துவிட்டேன். இப்போது இந்த வெப்சீரிஸ் தவிர, விஷ்ணு விஷால் உடன் ஆர்யன், ரவி மோகனின் ப்ரோ கோட் படங்களில் நடித்து வருகிறேன். விக்ரம் வேதா, இறுகப்பற்று என பல படங்களில் எனக்கு மனைவி கேரக்டர்களே அதிகம் வருகின்றன. அது என்ன ராசி என தெரியவில்லை.
சோஷியல் மீடியாவுக்கு நான் அதிக நேரம் கொடுப்பது இல்லை. அளவோடு நிறுத்திக் கொள்வேன். ஏஐ உள்ளிட்ட வளர்ச்சி, நல்ல விஷயம். அதேசமயம் ஆபத்தும் இருக்கிறது. பெண்கள் போலி போட்டோ, வீடியோவால் பாதிக்கப்படலாம். அதற்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும். நான் பெங்களூரை சேர்ந்தவள், இப்போது தென்னிந்திய சினிமாவில் ராஷ்மிகா மந்தனா, நித்யா மேனன், ருக்மணி வசந்த் போன்ற பெங்களூர் ஹீரோயின்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி. கல்யாணியின் லோகா மாதிரி எனக்கும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில், நல்ல ஆக் ஷன், காதல் கதைகளில் நடிக்க ஆசை'' என்று கூறியுள்ளார்.