நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சிவா மனசுல சக்தி (சுருக்கமாக எஸ்எம்எஸ்) படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ராஜேஷ்.எம். அதில் ஜீவா ஹீரோவாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் ஹிட்டானது. இந்த கூட்டணி பதினாறு ஆண்டுகளுக்குபின் மீண்டும் இணைகிறது. மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க உள்ளது. அது, சிவா மனசுல சக்தி பார்ட் 2 வா? வேறு கதையாக என்பது விரைவில் தெரியவரும்.
சில ஆண்டுகளாகவே பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் அடுத்த பாகம் உருவாகலாம் என்று சொல்லிக் கொண்டு இருந்தார் ராஜேஷ்.எம். ஆர்யாவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், பல காரணங்களால் அந்த படம் தொடங்கப்படவில்லை. இப்போது ராஜேஷ்.எம், ஜீவா, யுவன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், எஸ்.எம்.எஸ் பார்ட் 2 தொடங்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூவருமே வரிசையாக தோல்விகள் கொடுத்து வருவதால், ஒரு பெரிய வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதெல்லாம் சரி, எஸ்.எம்.எஸ் வெற்றிக்கு சந்தானம் காமெடி பெரிய பிளஸ் ஆக இருந்தது. இந்த படத்தில் அவர் நடிக்கிறாரா? சிம்பு படத்தில் காமெடியனாக நடிக்க ஓகே சொன்னார். ஆனால், அந்த படம் தள்ளிப்போகிறது. நண்பர்கள் ராஜேஷ்.எம், ஜீவாவுக்காக இதில் நடிப்பாரா என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.