2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு |
இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிஸி மகளான கல்யாணி, சென்னையில் பிறந்து, இங்கேயே படித்தவர். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ, சிம்புவுடன் மாநாடு படங்களில் நடித்தார். இப்போது மலையாளத்தில் கவனம் செலுத்துகிறார். மலையாளத்தில் கதை நாயகியாக அவர் நடித்த லோகா கடந்த வாரம் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ரத்தம் குடிக்கும் காட்டேரி, நீலி என்ற பழங்குடி பெண்ணாக கல்யாணி நடித்துள்ளார்.
நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ள லோகா படம் 5 பாகங்களாக வர உள்ளது. இது, முதல் பாகம். இந்த படத்தில் நடிகை அன்னாபென், ஹீரோக்கள் துல்கர், டொவினோ, மஞ்சும்மல்பாய்ஸ் சவுபின் சாகீர் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் மம்முட்டி மூப்பன் என்ற கேரக்டரில் வாய்ஸ் மட்டும் கொடுத்துள்ளார். பிரேமலு புகழ் நஸ்லன் கல்யாணியை காதலிப்பவராக வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பல ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் பல வந்து இருந்தாலும், இத்தனைபேர் கவுரவ வேடத்தில் நடித்தது கிடையாது. படத்தை தயாரித்தவர் துல்கர் என்பதாலும், 100 படங்கள் இயக்கிய சீனியர் இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி என்பதாலும், தாங்கள் அடுத்த பாகங்களில் நடிக்க இருப்பதால் இந்த பாகத்தில் இவர்கள் நடித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், ஈகோ பார்க்காமல் நடித்த இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழில் நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட பலர் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்து இருந்தாலும், எந்த ஹீரோவும் இப்படி நடிக்க முன் வந்தது இல்லை.